'திகார் கிளப்பிற்கு வரவேற்கிறோம்': பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவை கலாய்த்த சிறை கைதி
செய்தி முன்னோட்டம்
டெல்லியின் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏமாற்றுக்காரன் சுகேஷ் சந்திரசேகர், 'திகார் கிளப்'க்கு 'அக்கா' கே கவிதாவை வரவேற்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.
மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைப் பற்றிய கூடுதல் தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதா மார்ச் 23 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏமாற்றுக்காரன் சுகேஷ் கவிதாவுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.
தங்கள் தவறுகளை பொய்யான குற்றச்சாட்டுகள் என்றும், அரசியல் ரீதியான பழிவாங்கல் என்றும் கூறி நாடகமாடியவர்களுக்கு அவர்களது கர்மவினை திரும்பியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.
இந்தியா
"அரவிந்த் கெஜ்ரிவால் செய்த குற்றங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள்"
"உண்மை வென்றுள்ளது. போலி வழக்குகள், பொய்யான குற்றச்சாட்டுகள், அரசியல் தியான பழிவாங்கல் என்று நாடகமாடியவர்களின் நாடகங்கள் பொய்த்துவிட்டன. உங்கள் கர்மாக்கள் அனைத்தும் உங்களிடம் திரும்பி வருகின்றன" என்று அவர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.
உங்களையாராலும் தீண்ட முடியாது என்று நினைத்தீர்கள் அல்லவா? இது புதிய பாரதம் என்பதை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். சட்டம் முன்னெப்போதையும் விட வலிமையாக இருக்கிறது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கூடுதலாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த குற்றங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் தன்னிடம் இருப்பதாவும் அவர் கூறியுள்ளார்.
அந்த தகவல்களை எல்லாம் வெளியிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலின் தவறுகளை வெளிப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.