NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'திகார் கிளப்பிற்கு வரவேற்கிறோம்': பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவை கலாய்த்த சிறை கைதி
    அடுத்த செய்திக் கட்டுரை
    'திகார் கிளப்பிற்கு வரவேற்கிறோம்': பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவை கலாய்த்த சிறை கைதி

    'திகார் கிளப்பிற்கு வரவேற்கிறோம்': பிஆர்எஸ் தலைவர் கே கவிதாவை கலாய்த்த சிறை கைதி

    எழுதியவர் Sindhuja SM
    Mar 19, 2024
    02:11 pm

    செய்தி முன்னோட்டம்

    டெல்லியின் மண்டோலி சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏமாற்றுக்காரன் சுகேஷ் சந்திரசேகர், 'திகார் கிளப்'க்கு 'அக்கா' கே கவிதாவை வரவேற்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை வெளியிட்டுள்ளார்.

    மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலைப் பற்றிய கூடுதல் தகவல்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) தலைவர் கே.கவிதா மார்ச் 23 வரை காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

    இந்நிலையில், 200 கோடி ரூபாய் பணமோசடி வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஏமாற்றுக்காரன் சுகேஷ் கவிதாவுக்கு ஒரு கடிதத்தை எழுதியுள்ளார்.

    தங்கள் தவறுகளை பொய்யான குற்றச்சாட்டுகள் என்றும், அரசியல் ரீதியான பழிவாங்கல் என்றும் கூறி நாடகமாடியவர்களுக்கு அவர்களது கர்மவினை திரும்பியுள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

    இந்தியா 

    "அரவிந்த் கெஜ்ரிவால் செய்த குற்றங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள்"

    "உண்மை வென்றுள்ளது. போலி வழக்குகள், பொய்யான குற்றச்சாட்டுகள், அரசியல் தியான பழிவாங்கல் என்று நாடகமாடியவர்களின் நாடகங்கள் பொய்த்துவிட்டன. உங்கள் கர்மாக்கள் அனைத்தும் உங்களிடம் திரும்பி வருகின்றன" என்று அவர் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

    உங்களையாராலும் தீண்ட முடியாது என்று நினைத்தீர்கள் அல்லவா? இது புதிய பாரதம் என்பதை நீங்கள் மறந்துவிடுகிறீர்கள். சட்டம் முன்னெப்போதையும் விட வலிமையாக இருக்கிறது" என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

    கூடுதலாக, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த குற்றங்கள் பற்றிய கூடுதல் தகவல்கள் தன்னிடம் இருப்பதாவும் அவர் கூறியுள்ளார்.

    அந்த தகவல்களை எல்லாம் வெளியிட்டு அரவிந்த் கெஜ்ரிவாலின் தவறுகளை வெளிப்படுத்துவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    தெலுங்கானா
    அரவிந்த் கெஜ்ரிவால்
    டெல்லி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    தெலுங்கானா

    'பாரத் மாதா கி ஜெய்!' என்று சொல்பவர்களுக்கு மட்டுமே இந்தியாவில் இடம் உண்டு: மத்திய அமைச்சர் இந்தியா
    ஐஐடி காரக்பூர் மாணவர், விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை மேற்கு வங்காளம்
    நவராத்திரி ஸ்பெஷல்: நவராத்திரி பிற மாநிலங்களில் எப்படி கொண்டாடப்படுகிறது? நவராத்திரி
    தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தெலுங்கானா எம்பிக்கு கத்தி குத்து  குற்றவியல் நிகழ்வு

    அரவிந்த் கெஜ்ரிவால்

    பிரதமரின் பட்டபடிப்பு விவரங்கள் தேவையில்லை: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அபராதம் இந்தியா
    டெல்லி மதுபானக் கொள்கை வழக்கு: அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சிபிஐ சம்மன்  இந்தியா
    மதுபானக் கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் பெயர் சிபிஐ குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டது இந்தியா
    மத்திய அரசு Vs எதிர்க்கட்சிகள்: மம்தா பானர்ஜி-அரவிந்த் கெஜ்ரிவால் சந்திப்பு இந்தியா

    டெல்லி

    தென் மாநிலங்களுக்கு வரிப் பகிர்வில் மத்திய அரசு பாரபட்சம்: எதிர்க்கட்சிகள் டெல்லியில் ஆர்ப்பாட்டம் மத்திய அரசு
    டெல்லியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த விவசாயிகள் திட்டம்; எல்லைகளில் போலீசார் குவிப்பு விவசாயிகள்
    விவசாயிகளின் முற்றுகை போராட்டம்: டெல்லியில் 144 தடை உத்தரவு விவசாயிகள்
    விவசாயிகளின் போராட்டம் 2.0: 2020-ல் நடந்த போராட்டத்திற்கும்,'டெல்லி சலோ'விற்கும் என்ன வித்தியாசம்? விவசாயிகள்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025