வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்யக்கூடும்
மே-4 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- கடலூர், கள்ளக்குறிச்சி, இராமநாதபுரம், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, பெரம்பலூர், நாகபட்டினம்,திருவாரூர், தஞ்சாவூர், அரியலூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, சேலம், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், காரைக்கால் மே-5 முதல் மே-7 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மே-8 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
மத்திய வங்கக்கடலில் புயல் உருவாக வாய்ப்பு
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. மேலும், தமிழக கடலோர பகுதிகளுக்கு மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளது. வரும் 6ஆம் தேதி தென் கிழக்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும். இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சி 7ஆம் தேதி அன்று ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறக்கூடும். அதன் பிறகு, 8ஆம் தேதி அன்று இது ஒரு காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி, மத்திய வங்கக்கடல் பகுதிக்கு நகர்ந்து ஒரு புயலாக வலுப்பெற வாய்ப்பிருக்கிறது. இதனால், வரும் 7ஆம் தேதி முதல் 9ஆம் தேதி வரை வங்கக்கடலில் மீன்பிடிக்க செல்பவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.