தமிழகத்தில் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு: மீனவர்களுக்கு எச்சரிக்கை
மே-24 முதல் மே-26 வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மே-27 மற்றும் மே-28 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. மீனவர்களுக்கான எச்சரிக்கை மே-26 முதல 28 வரை: மன்னார் வளைகுடா, தமிழக கடலோரம், குமரிக்கடல், கேரள கடலோரம் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 55 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும். மே-27, 28: இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறைக்காற்று மணிக்கு 40-45 கிமீ வேகத்தில் வீசக்கூடும். இடையிடையே 55 கிமீ வேகத்திலும் காற்று வீசக்கூடும்.