11 தமிழக மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம்
தமிழக பகுதியின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஜூன் 7 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- திருச்சி, நாமக்கல், தர்மபுரி, தஞ்சாவூர், திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், புதுக்கோட்டை ஜூன்-8 மற்றும் ஜூன் 9 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஜூன்-10 மற்றும் ஜூன் 11 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
வடக்கு திசை நோக்கி நகர தொடங்கி இருக்கும் 'பிப்பர்ஜாய்' புயல்
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48-மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். 'பிப்பர்ஜாய்' புயலுக்கான எச்சரிக்கை: நேற்று காலை 8:30 மணியளவில் தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய அரபிக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், நேற்று காலை 11:30 மணியளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது. இது நேற்று மாலை 5:30 மணியளவில் மத்திய கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் 'பிப்பர்ஜாய்' புயலாக வலுப்பெற்றது. இது இன்று தீவிர புயலாக மாறி வடக்கு திசை நோக்கி நகர தொடங்கியுள்ளது.