
கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் தமிழக மாவட்டங்களின் பட்டியல்
செய்தி முன்னோட்டம்
தென்கிழக்கு வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி நிலவுவதாலும், தமிழகத்தில் நிலவும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாகவும்,
ஜூன்-16
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஜூன் 17
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
ஜூன் 18
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்--இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை,தர்மபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், திருச்சி, பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், நாமக்கல், புதுச்சேரி
சின்க்ஸ்ன்க்
சென்னையின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு
ஜூன் 19
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை,தர்மபுரி, சேலம், திருவள்ளூர், கிருஷ்ணகிரி, ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல்
ஜூன் 20
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் அநேக பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- திருவள்ளூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48-மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம்.