Page Loader
11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பதிவாகியுள்ளது

11 தமிழக மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

எழுதியவர் Sindhuja SM
Jun 01, 2023
06:32 pm

செய்தி முன்னோட்டம்

தென் இந்திய பகுதிகளுக்கு மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக, ஜூன் 1 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்-- நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், தர்மபுரி ஜூன் 2 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

details

சென்னையின் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது

ஜூன் 3 மற்றும் ஜூன் 4 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஜூன் 5 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் லேசாக மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிகபட்ச வெப்பநிலை 39-40 டிகிரி செல்சியஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 28-29 செல்சியஸாகவும் இருக்கும்.