Page Loader
அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது

அடுத்த 5 நாட்களுக்கான கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் 

எழுதியவர் Sindhuja SM
Jul 04, 2023
03:44 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வானிலை: மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோர பகுதிகளின் மேல் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது. மேலும், மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை-4 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- நீலகிரி, கோவை கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம் ஜூலை-5 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. அதிக கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- நீலகிரி, கோவை,தென்காசி

டஜ

கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்களின் பட்டியல் 

ஜூலை-5 கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- திருப்பூர், திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமாரி, மதுரை, விருதுநகர் ஜூலை-6 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி ஜூலை-7 மற்றும் ஜுலை-8 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48-மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.