Page Loader
8 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை மழை பெய்ய வாய்ப்பு 
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பதிவாகி இருக்கிறது.

8 தமிழக மாவட்டங்களில் இன்று கனமழை மழை பெய்ய வாய்ப்பு 

எழுதியவர் Sindhuja SM
Jul 13, 2023
02:34 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக வானிலை: மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, ஜூலை 13 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. கனமழை பெய்ய வாய்ப்பிருக்கும் மாவட்டங்கள்-- நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஜூலை 14 தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.

சஜா

ஜூலை 15 முதல் ஜூலை 19 வரை

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலின் ஓரிரு பகுதிகளில் லேசான/ மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யலாம். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 -36 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-27 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.