Page Loader
தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

தமிழகம்: அடுத்த 7 நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு

எழுதியவர் Sindhuja SM
Feb 19, 2024
06:41 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தின் ஒரு பகுதியிலும் மழை பதிவாகவில்லை. தமிழகத்தில் நிலவும் கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பிப்ரவரி 19 மற்றும் பிப்ரவரி 20 தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழக பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும். பிப்ரவரி 21 முதல் பிப்ரவரி 23 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். உள் தமிழக பகுதிகள் அதிகாலை வேளையில் பனிமூட்டத்துடன் காணப்படும்

தமிழகம்

பிப்ரவரி 24

கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. உள் தமிழகத்தில் வறண்ட வானிலை நிலவக்கூடும். பிப்ரவரி 25 தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்காலிலும் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும். சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும், சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சிஸாகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சிஸாகவும் இருக்கும்.