வயநாடு நிலச்சரிவு: 308 பேர் உயிரிழப்பு; ராணுவத்துடன் மீட்புப்பணியில் கைகோர்த்த ISRO
கேரளாவின் வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை விஞ்ஞானிகள் ஆய்வு செய்ய கேரளா முதல்வர் பினராயி விஜயன் வைத்திருந்த தடையை நீக்கி உத்தரவிட்டுள்ளார். இதன் தொடர்ச்சியாக, மண்சரிவு ஏற்பட்ட மலைப் பகுதியை RISAT SAR தொழில்நுட்பத்தை பயன்படுத்தி புகைப்படமாக எடுத்து அதன் முழு தகவல்களை வழங்கி உள்ளது இஸ்ரோ. இஸ்ரோ அளித்த தகவலின்படி, மண் சரிவு ஆரம்பப் புள்ளியில் இருந்து 8 கிலோ மீட்டர் பயணித்து முடிந்திருக்கிறது என்றும் ஒட்டுமொத்தமாக 86,000 சதுர அடி பாதிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல்களை வழங்கி உள்ளது. நிலச்சரிவில் இறந்தவர்களின் எண்ணிக்கை வெள்ளிக்கிழமை 308 ஐத் தாண்டியது, மேலும் இடிந்து விழுந்த கட்டிடங்கள் மற்றும் இடிபாடுகளுக்கு அடியில் சிக்கியிருக்கும் உயிர் பிழைத்தவர்களைத் தேடும் பணியில் மீட்புப் படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மீட்புப்பணியில் கைகோர்த்த ISRO
வயநாடு மீட்புப் பணிகள் புதுப்பிப்புகள்
ISRO வழங்கிய தகவல்களின் அடிப்படையில், இந்திய ராணுவம், என்.டி.ஆர்.எஃப், கடலோர காவல்படை மற்றும் இந்திய கடற்படை ஆகியவை அடங்கிய கூட்டுக்குழு பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேடுதல்களை நடத்தும். ஒவ்வொரு குழுவிலும் மூன்று உள்ளூர் மற்றும் ஒரு வனத்துறை ஊழியர் இருப்பார். மீட்புப் பணிகளை மேற்கொள்வதற்காக மீட்புப் பணியாளர்களின் நாற்பது குழுக்கள் தேடுதல் பகுதிகளை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கும். முதல் மண்டலம் அட்டமலை மற்றும் ஆரண்மலாவைக் கொண்டுள்ளது. முண்டக்காய் இரண்டாவது மண்டலமாகவும், புஞ்சிரிமட்டம் மூன்றாவது மண்டலமாகவும், வெள்ளர்மலை நான்காவது மண்டலமாகவும், ஜிவிஎச்எஸ்எஸ் வெள்ளர்மலை ஐந்தாவது மண்டலமாகவும், சாலியாற்றின் கீழ்பகுதி ஆறாவது மண்டலமாகவும் உள்ளது. ஆற்றைச் சுற்றியுள்ள எட்டு காவல் நிலையங்களைச் சேர்ந்த காவலர்கள் மற்றும் நீச்சலில் நிபுணத்துவம் பெற்ற உள்ளூர் மக்களும் தேடுதலில் பங்கேற்பார்கள்.