Page Loader
வீடியோ: பைக்கில் ஏறாததால் பெண்ணை சரமாரியாக தாக்கிய நபர்!
பதிவான சிசிடிவி காட்சி

வீடியோ: பைக்கில் ஏறாததால் பெண்ணை சரமாரியாக தாக்கிய நபர்!

எழுதியவர் Sindhuja SM
Jan 09, 2023
09:24 am

செய்தி முன்னோட்டம்

தன் பைக்கில் ஏறி 'ரைடு' வர மறுத்ததால் பெண்ணை சரமாரியாக தாக்கிய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். ஹரியானா மாநிலம் குருகிராமில் வசிக்கும் ஒரு பெண், வேலையை முடித்துவிட்டு ஆட்டோவில் தன் வீட்டருகே வந்து இறங்கியிருக்கிறார். அப்போது, அவரை நெருங்கிய ஒரு பைக் ஆசாமி ஏதோ பேசிவிட்டு தன் ஹெல்மெட்டால் அந்த பெண்ணை சரமாரியாக தாக்க தொடங்கிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்-பக்கத்தினர் அந்த பெண்ணை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கிருந்த சிசிடிவி கேமராவில் நடந்த சம்பவங்கள் எல்லாம் பதிவான நிலையில், போலீஸார் அந்த பைக் ஆசாமியை கைது செய்துள்ளனர். விசாரணையில் தாக்கியவரின் பெயர் கமல் என்பதும், அவர் அந்த பெண்ணின் பக்கத்து வீட்டுக்காரர் என்பதும் தெரியவந்துள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

வீடியோ காட்சி: நடு ரோட்டில் பெண்ணை ஹெல்மெட்டால் தாக்கிய நபர்!