
வைரல் வீடியோ: ஓடும் ரயிலில் வட இந்தியர்களை தாக்கும் தமிழர்
செய்தி முன்னோட்டம்
ஓடும் ரயிலில் வட இந்தியர்கள் மூவரை, தமிழர் ஒருவர் சரமாரியாக தாக்கும் வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
வட இந்தியர்கள் என்ற ஒரே காரணத்திற்காக மூவரை ஒருவர் தாக்குவதும் தகாத வார்த்தைகளில் பேசுவதும் இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இதில் பலரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.
'நீ தமிழா ஹிந்தியா' என்று கேட்கும் அந்த நபர் பலர் சொல்லியும் கேட்காமல் கூட்டம் நிறைந்த ஒரு ரயில் பெட்டிக்குள் மூவரை தாக்கி இருக்கிறார்.
வட இந்தியர்களை தாக்கிய நபரை தற்போது ரயில்வே போலீஸார் தேடி வருகின்றனர். அவர் மீது FIR போடப்பட்டுள்ளது.
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தமிழ்நாட்டு மக்களின் வேலைகளை திருடுவதாக குற்றம் சாட்டி அந்த நபர் இந்த காரியத்தை செய்ததாக NDTV தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
வைரலாகி கொண்டிருக்கும் வீடியோ
This assault is a hate crime which is a result of hate politics happening in the state . From name calling to physical assault , the guy abuses the prime minister of the country . @mkstalin inaction in such cases is a sin putting tamils elsewhere at risk . @annamalai_k @AmitShah pic.twitter.com/HBpLVyS4wz
— karthik gopinath (@karthikgnath) February 15, 2023