
வைரல் வீடியோ: இந்தி எழுத்துக்கள் மீதிருக்கும் ஸ்டிக்கர்களைக் கிழித்தெறியும் இளைஞர்
செய்தி முன்னோட்டம்
பெங்களூரு மெட்ரோ ரயிலில் இந்தி அறிவுறுத்தல்கள் மீது ஒட்டபட்டிருந்த ஸ்டிக்கர்களை கிழித்தெடுக்கும் இளைஞரின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அக்ஷத் குப்தா என்ற நபர், அந்த வீடியோவில் இந்தி எழுத்துகளை மறைத்திருக்கும் தாள்களை கிழித்தெடுக்கிறார்.
மேலும், இந்தி எழுத்துக்கள் ஏன் ஸ்டிக்கர்களால் மறைக்கப்பட்டிருக்கிறது என்று குப்தா அதில் கேள்வி எழுப்பி இருந்தார்.
"தென்னிந்தியாவில் இந்தி மீது ஏன் இவ்வளவு வெறுப்பு??" என்று அந்த வீடியோ தலைப்பிடப்பட்டிருந்தது.
இதனால், இணையத்தில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது.
அதற்கு ஒரு பயனர் "அப்படியானால் டெல்லி மெட்ரோக்களில் கன்னடத்தில் தகவல்கள் உள்ளனவா?" என்று கேள்வி எழுப்பி இருந்தார்.
பின்னர், குப்தாவின் புதிய வீடியோ ஆன்லைனில் வெளிவந்தது, அதில் அவர் இதை செய்தற்கு மன்னிப்பு கேட்டிருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
இந்தி எழுத்துக்களால் வைரலான வீடியோ
Why so much Hate for Hindi in South India?? 😢 pic.twitter.com/I7yIhOC5ts
— Kanan Shah (@KananShah_) January 30, 2023