NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / சிவகாசி கண்காட்சியில் பழங்கால விண்டேஜ் கேமரா - புகைப்பட கலைஞர் விளக்கம்
    சிவகாசி கண்காட்சியில் பழங்கால விண்டேஜ் கேமரா - புகைப்பட கலைஞர் விளக்கம்
    இந்தியா

    சிவகாசி கண்காட்சியில் பழங்கால விண்டேஜ் கேமரா - புகைப்பட கலைஞர் விளக்கம்

    எழுதியவர் Nivetha P
    August 28, 2023 | 03:59 pm 1 நிமிட வாசிப்பு
    சிவகாசி கண்காட்சியில் பழங்கால விண்டேஜ் கேமரா - புகைப்பட கலைஞர் விளக்கம்
    சிவகாசி கண்காட்சியில் பழங்கால விண்டேஜ் கேமரா - புகைப்பட கலைஞர் விளக்கம்

    விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடக்கும் கண்காட்சி ஒன்றில் பழங்கால கேமராக்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. பழங்காலத்தில் விண்டேஜ் கேமராக்கள் தான் அதிகளவு பயன்பாட்டில் இருந்துள்ளது. முந்தைய காலகட்டத்தில் கேமரா என்பதே அபூர்வமான பொருளாக பார்க்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிவகாசி கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள நூற்றாண்டு பழமையான விண்டேஜ் கேமராக்கள் எப்படி இருந்தது, எவ்வாறு செயல்பட்டது? என்று புகைப்பட கலைஞர் செல்வம் என்பவர் விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறியதாவது, "அப்போதைய கேமரா நிறுவனங்கள் 120 ரோல் கேமராக்களை தான் தயாரித்தது. அதில் 12 புகைப்படங்கள் மட்டுமே எடுக்கக்கூடிய வகையில் பிலிம் இருக்கும். 12 புகைப்படங்கள் எடுத்தப்பின்னர் மீண்டும் புதிய ரோலினை வைக்க வேண்டும்" என்று கூறியுள்ளார்.

    முதன்முதலாக கண்டறியப்பட்ட கேமராவின் பெயர் 'ஒப்ஸ்க்யூரா'

    மேலும் அவர், ஒவ்வொரு முறையும் ஒரு புகைப்படம் எடுத்தப்பின்னர் பிலிமை ஒருமுறை கழற்றினால் மட்டுமே அடுத்த படம் எடுக்கமுடியும் என்றும், டிஜிட்டல் கேமராக்களில் உள்ளது போல விண்டேஜ் கேமராக்களில் ஜும் செய்வது, போகஸ் செய்வது போன்ற வசதிகள் எதுவும் இருக்கவில்லை என்றும் கூறியுள்ளார். தற்போதைய காலகட்டத்தில் கையில் வைத்திருக்கும் மொபைல் போன் மூலம் நினைத்த நேரத்தில் யார் வேண்டுமானாலும் ஓர் புகைப்படத்தினை எடுத்து பார்த்து கொள்ள முடிகிறது. ஆனால் அந்த காலத்தில் புகைப்படம் எடுப்பது என்பது அறிவு சார்ந்த நுட்பமான வேலையாக கருதப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதன்முதலாக கண்டறியப்பட்ட கேமராவின் பெயர் 'ஒப்ஸ்க்யூரா', இது சூரிய ஒளியினை படம்பிடிக்க பயன்படுத்தப்பட்டது என்றும், இது அளவில் மிக பெரியதாக இருந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கிறது.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    விருதுநகர்
    மொபைல்

    விருதுநகர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் தேரோட்டம் - பக்தர்கள் பரவசம்  திருவிழா
    சொத்துகுவிப்பு வழக்கிலிருந்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விடுவிக்கப்பட்டார்  அதிமுக
    கர்மவீரர் காமராசரின் 121வது பிறந்தநாள் கொண்டாட்டம் - மு.க.ஸ்டாலின் மலர் தூவி மரியாதை  மு.க ஸ்டாலின்
    விருதுநகர் வெம்பக்கோட்டை அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட பொருட்கள்  தொல்லியல் துறை

    மொபைல்

    அனைத்து வங்கி பயனர்களும் பயன்படுத்தும், SBI-இன் புதிய யுபிஐ கட்டண சேவை செயலி யுபிஐ
    பயன்பாட்டுக்கு எப்படி இருக்கிறது 'நத்திங் போன் (2)'?: ரிவ்யூ மொபைல் ரிவ்யூ
    வெளியானது நத்திங் நிறுவனத்தின் ஃப்ளாக்ஷிப் ஸ்மார்ட்போனான 'நத்திங் போன் (2)'  ஸ்மார்ட்போன்
    புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனான கேலக்ஸி M34-ஐ வெளியிட்டது சாம்சங் சாம்சங்
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023