Page Loader
விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு - விஜயபிரபாகரன் பேட்டி
விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு - விஜயபிரபாகரன் பேட்டி

விஜயகாந்த் உடல்நிலையில் பின்னடைவு - விஜயபிரபாகரன் பேட்டி

எழுதியவர் Nivetha P
Aug 21, 2023
09:14 pm

செய்தி முன்னோட்டம்

நடிகரும், தேமுதிக கட்சி பொது செயலாளருமான விஜயகாந்த்'தின் மகன்களான விஜயபிரபாகரன் மற்றும் சண்முகபாண்டியன் இன்று(ஆகஸ்ட்.,21) மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த விஜயபிரபாகரன், "கேப்டன் விஜயகாந்த் உடல்நிலையில் சற்று பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ஆனால் அவர் 100 ஆண்டுகளுக்கு நலமாக இருப்பார். பழையபடி அவர் எழுந்து பேச, நடமாட தேவையான முயற்சிகள் அனைத்தையும் நாங்கள் எடுத்துவருகிறோம்" என்று கூறியுள்ளார். மேலும், 'முடியாது என்பது முட்டாள்களுக்கு சொந்தமானது' என்பது விஜயகாந்த்தின் கருத்து என்றும், அதனையே தங்கள் தாரக மந்திரமாக எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். தொடர்ந்து, தனது சிறுவயதில் இருந்தே தனது தந்தை இக்கட்சியினை வளர்த்ததை அருகிலிருந்து பார்த்ததாகவும், அதனாலயே தொண்டர்கள் கூப்பிட்ட குரலுக்கு அரசியலுக்கு வந்துவிட்டதாகவும் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

விஜயகாந்த் மகன் பேட்டி