Page Loader
அதிகாரியை தரக்குறைவாக பேசிய ஐஏஎஸ்; வைரலான வீடியோ
பீகார் அரசின் மதுவிலக்கு, கலால் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சுனில் குமார்

அதிகாரியை தரக்குறைவாக பேசிய ஐஏஎஸ்; வைரலான வீடியோ

எழுதியவர் Sindhuja SM
Feb 02, 2023
10:09 pm

செய்தி முன்னோட்டம்

பீகாரில் உள்ள மூத்த அதிகாரி ஒருவர், தனது துறையில் நடந்த ஆய்வுக் கூட்டத்தில், ப்ரொபேஷனில் இருக்கும் ஒரு ஜூனியர் அதிகாரியை தரக்குறைவாக திட்டும் வீடியோ கேமராவில் பதிவாகியுள்ளது. வைரலாகி கொண்டிருக்கும் இந்த வீடியோவில், ஐஏஎஸ் அதிகாரி கே.கே. பதக் அவரது ஜூனியரை தரக்குறைவாக பேசுவது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. பீகார் நிர்வாக சேவை சங்கம் அவரது நடத்தைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், அவரை பணிநீக்கம் செய்ய வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்துள்ளது.

பீகார்

ஐஏஎஸ் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர்

"இங்குள்ள மக்களுக்கு அறிவே இல்லை. சென்னையில், மக்கள் விதிகளை பின்பற்றுகிறார்கள். இங்கு போக்குவரத்து விதிகளை யாராவது பின்பற்றுவதை நீங்கள் பார்த்தீர்களா? இவர்கள் சிவப்பு விளக்கு எரிந்துகொண்டிருக்கும் போது கூட ஹாரன் அடிக்கிறார்கள்" என்று பீகார் அரசின் மதுவிலக்கு துறையின் முதன்மை செயலாளர் பதக் அந்த வீடியோவில் கூறுகிறார். அதற்கு ஒரு துணை ஆட்சியர் அவரிடம் மன்னிப்பு கேட்க முயல்கிறார், ஆனால் பதக் மசியவில்லை. பயிற்சியின் போது துணை ஆட்சியரை தவறாக நடத்தியதற்காக அவர் மீது அளிக்கப்பட்ட புகாரினால் அவர் கோபமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கே.கே.பதக் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பீகார் அரசின் மதுவிலக்கு, கலால் மற்றும் பதிவுத்துறை அமைச்சர் சுனில் குமார் தெரிவித்துள்ளார்.