Page Loader
வீடியோ: விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் கடைசி நொடிகள் 
இந்த வீடியோவை பயணி ஒருவர் பதிவு செய்ததாக கூறப்படுகிறது.

வீடியோ: விபத்துக்குள்ளான கோரமண்டல் எக்ஸ்பிரஸின் கடைசி நொடிகள் 

எழுதியவர் Sindhuja SM
Jun 08, 2023
05:59 pm

செய்தி முன்னோட்டம்

ஒடிசாவின் பாலசோரில் கடந்த வாரம் நடந்த பயங்கர ரயில் விபத்தில் 288 பேர் உயிரிழந்தனர் மற்றும் 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். கோரமண்டல் எக்ஸ்பிரஸ், பெங்களூர்-ஹவுரா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் சரக்கு ரயில் ஆகிய மூன்று ரயில்களும் மோதி கொண்டதால் ஏற்பட்ட இந்த விபத்து, நாட்டின் மிக மோசமான ரயில்வே விபத்துகளில் ஒன்றாக கருதப்படுகிறது. கோரமண்டல் எக்ஸ்பிரஸ், சரக்கு ரயில் மீது மோதிய போது ரயிலுக்குள் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புதிய வீடியோ வெளியாகியுள்ளது. ஒடிசா டிவியால் பகிரப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பயணி ஒருவர் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. ஆனால், வீடியோவின் நம்பகத்தன்மையை NewsBytesஆல் சரிபார்க்க முடியவில்லை.

ட்விட்டர் அஞ்சல்

வைரலாகி வரும் கோரமண்டல் எக்ஸ்பிரஸின் வீடியோ