வீடியோ: குடி போதையில் காரை இடித்து 3 கிலோ மீட்டருக்கு இழுத்து சென்ற லாரி
செய்தி முன்னோட்டம்
மீரட்டில் ஒரு பெரிய 22 சக்கர கண்டெய்னர் லாரி, ஒரு காரை மோதி 3 கிலோ மீட்டர் வரை அதை இழுத்து சென்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சினிமா படத்தில் காண்பது போல் இந்த நிஜ வீடியோவில் நடப்பதால் இந்த வீடியோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.
அதிர்ஷ்டவசமாக, காரில் இருந்த நான்கு பேரும் சரியான நேரத்தில் வெளியே குதித்ததால், பலத்த காயம் ஏதும் ஏற்படாமல் தப்பினர்.
சுமார் 3 கிலோ மீட்டர் தூரம் வரை அந்த கார் இழுத்துச் செல்லப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.
எவ்வளவோ கூச்சலிட்டும் லாரி ஓட்டுநர் வண்டியை நிறுத்தவில்லை. போலீசார் துரத்திச் சென்று தடுத்து நிறுத்திய பின்னரே அவர் நிறுத்தி இருக்கிறார். மதுபோதையில் இருந்த லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
கார் மேல் மோதியும் நிற்காமல் சென்ற லாரியின் வீடியோ
Video: Drunk UP Man Drags Car With Container Truck, Narrow Escape For 4 https://t.co/Zxa7EsdJSY pic.twitter.com/xDeJuQVHAb
— NDTV (@ndtv) February 13, 2023