
வந்தே பாரத் விரைவு ரயிலின் பேட்டரி பெட்டியில் திடீர் தீ விபத்து
செய்தி முன்னோட்டம்
மத்தியப் பிரதேச தலைநகர் போபாலில் இருந்து புது டெல்லி நோக்கிச் சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயிலின் பேட்டரி பெட்டியில் இன்று(ஜூலை 17) காலை திடீரென்று தீ விபத்து ஏற்பட்டது.
போபாலில் உள்ள ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் இருந்து புது டெல்லியில் உள்ள நிஜாமுதீன் ரயில் நிலையம் நோக்கி அந்த ரயில் சென்று கொண்டிருந்தது.
விபத்து ஏற்பட்ட பெட்டியில் 20-22 பயணிகள் இருந்தனர். அவர்கள் உடனடியாக பிற பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர்.
மேலும், இந்த சம்பவத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சகிவி
சேதமடைந்த பெட்டியை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்
சி-12 கோச்சில் உள்ள பேட்டரி பெட்டியில் தீப்பற்றியதைக் காலை 6.45 மணியளவில் சில ரயில்வே ஊழியர்கள் கண்டனர்.
அதைத் தொடர்ந்து, புது டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்த வந்தே பாரத் ரயில் உடனடியாக விதிஷா மாவட்டத்தில் உள்ள குர்வாய் மற்றும் கைத்தோரா நிலையங்களுக்கு இடையில் நிறுத்தப்பட்டது.
அதற்கு பிறகு, தீயணைப்பு படை அதிகாரிகள் குழு உடனடியாக சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். சேதமடைந்த பெட்டியை சீரமைக்கும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டனர்.
"குர்வாய் கெத்தோரா ரயில் நிலையத்தில் வந்தே பாரத் எக்ஸ்பிரஸின் பேட்டரி பெட்டியில் தீ விபத்து ஏற்பட்டது. தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்" என்று ரயில்வே ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.