யாருக்கெல்லாம் இலவச லேப்டாப்? ரூ.2,000 கோடியில் வெற்றி மடிக்கணினி திட்டம் அறிவிப்பு; முழு தகுதி விவரங்கள்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் தொழில்நுட்ப அறிவை மேம்படுத்தும் நோக்கில் வெற்றி மடிக்கணினித் (லேப்டாப்) திட்டத்தை ₹2,000 கோடி செலவில் செயல்படுத்த முதலமைச்சர் ஜோசப் விஜய் உத்தரவிட்டுள்ளார். இன்றைய டிஜிட்டல் யுகத்தில் உயர்கல்வி மாணவர்களுக்கு லேப்டாப் இன்றியமையாத உபகரணப் பொருளாக விளங்கும் நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கான விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் நிதி ஒதுக்கீட்டிற்கான நிர்வாக அனுமதியை வழங்கி தமிழக அரசு தற்சமயம் அரசாணையை வெளியிட்டுள்ளது.
பலமடையும் மாணவர்கள்
வெற்றி மடிக்கணினித் திட்டத்தின் மூலம் பயனடையும் பல்வேறு துறை மாணவர்கள்
அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் கலை, அறிவியல், பொறியியல், பாலிடெக்னிக், ஐடிஐ, மருத்துவம், கால்நடை மருத்துவம், வேளாண்மை மற்றும் சட்டப் படிப்புகளின் 1-ஆம் மற்றும் 2-ஆம் ஆண்டு இளங்கலை மற்றும் டிப்ளமோ மாணவர்கள் இந்த திட்டத்தில் பயனடைவார்கள்.
மேலும், கடந்த 2025-2026 கல்வியாண்டில் லேப்டாப் பெறாத அரசு மற்றும் உதவிபெறும் கல்லூரிகளின் 3-ஆம் மற்றும் 4-ஆம் ஆண்டு தொழில்முறைப் படிப்பு மாணவர்களுக்கும் இத்திட்டத்தின்கீழ் லேப்டாப்கள் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எல்காட்
பொறியியல் மாணவர்களுக்கு Intel Core i5 மற்றும் எல்காட் நிறுவனத்தின் பங்கு
பொறியியல் துறை மாணவர்களின் அதிநவீன தொழில்நுட்பக் கல்வித் தேவைகளைக் கருத்திற்கொண்டு, அவர்களுக்கு Intel Core i5 அல்லது அதற்கு இணையான உயர்தரத் தொழில்நுட்பம் கொண்ட லேப்டாப்கள் வழங்கப்படும் என அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டத்தைக் கண்காணிக்க முதலமைச்சர் தலைமையில் உயர்மட்ட வழிகாட்டுதல் குழு அமைக்கப்படவுள்ளது.
மேலும், உயர்தரக் கட்டுப்பாட்டுடன் மடிக்கணினிகளைக் கொள்முதல் செய்வதை உறுதிசெய்யத் தமிழ்நாடு மின்னணு நிறுவனத்திற்கு (எல்காட்) நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புத் திறன்
மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறனை உயர்த்தும் முக்கிய மைல்கல்
இன்றைய அதிவேக டிஜிட்டல் காலத்தில், கிராமப்புற மற்றும் எளிய அடித்தட்டு குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் உலகளாவிய போட்டிகளில் சிறந்து விளங்க இத் திட்டம் பெரிதும் உதவும்.
மாணவர்களின் இணையவழிக் கல்வி, திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் மற்றும் எதிர்கால வேலைவாய்ப்புக்கான தகுதிகளை வளர்த்துக் கொள்ள இந்த லேப்டாப்கள் பெரும் தூணாக அமையும்.
தவெக அரசின் அறிவிப்பு தமிழக உயர்கல்வித் துறையில் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKINGNEWS || கல்லூரி மாணவர்களுக்கு ரூ.2000 கோடியில் லேப்டாப் - முதலமைச்சர் விஜய்#CMVijay | #CollegeStudents | #Laptops | #PolimerNews pic.twitter.com/gF9yGaWJ1p
— Polimer News (@polimernews) November 7, 2026