
விசிக தலைவர் திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி
செய்தி முன்னோட்டம்
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் உடல்நிலை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது அவரின் தொண்டர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
கட்சியின் சார்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், காய்ச்சல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்ட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த இரண்டு நாட்கள், திருமாவளவன், மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டி இருக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.
இதனால், விசிக கட்சி தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் யாரும், வரும் அக்டோபர் 30ஆம் தேதி வரை தொல்.திருமாவளவனை சந்திக்க வர வேண்டாம் என்றும் கட்சியின் சார்பில் நிர்வாகிகளுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது என செய்திகள் தெரிவிக்கின்றன.
ட்விட்டர் அஞ்சல்
திருமாவளவன் மருத்துவமனையில் அனுமதி
விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி. மருத்துவமனையில் அனுமதி #Thirumavalavan | #VCK | #hospital | #Chennai | #sathiyamnews pic.twitter.com/3iWRtSWWs3
— SathiyamTv (@sathiyamnews) September 26, 2023