வில்லிவாக்கம் - காட்பாடி; வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நிறைவு
வந்தே பாரத் விரைவு ரயிலின் குறுகிய தூர மாடலான வந்தே மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் வில்லிவாக்கம்-காட்பாடி இடையே சனிக்கிழமை (ஆகஸ்ட் 3) நடத்தப்பட்டது. சென்னை கடற்கரை நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் ஒரு சுற்றுப் பயணத்தை முடித்தது. பெரம்பூரில் உள்ள ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட இந்த ரயில் 12 பெட்டிகளைக் கொண்டுள்ளது. தற்போதைய குறுகிய தூர ரயில்களைப் போலல்லாமல், இவை கழிப்பறை வசதிகளுடன் முழுமையாக குளிரூட்டப்பட்டுள்ளது. வந்தே மெட்ரோ மணிக்கு 130 கிமீ வேகத்தில் பயணிக்க முடியும் மற்றும் வசதியான இருக்கைகள், தானியங்கி கதவுகள் மற்றும் மேம்பட்ட அறிவிப்பு அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த ரயிலின் சோதனை ஓட்டத்தில் பங்கேற்ற அதிகாரிகள், செப்டம்பர் இறுதிக்குள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என தெரிவித்தனர்.
வந்தே மெட்ரோ சோதனை ஓட்டம்
Chennai's Vande Metro begins trial runs today between Chennai Beach and Katpadi. Designed for shorter routes, it will replace MEMUs and features a top speed of 130 km/h. The train includes modern amenities like automatic doors and an infotainment system. Railway Minister Ashwini... pic.twitter.com/STVLfRmSaZ— Jagran English (@JagranEnglish) August 3, 2024