LOADING...
'வந்தே மாதரம்' பாடல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்
இந்த கலந்துரையாடலுக்கு எட்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது

'வந்தே மாதரம்' பாடல் குறித்து இன்று நாடாளுமன்றத்தில் விவாதம்: பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 08, 2025
09:15 am

செய்தி முன்னோட்டம்

தேசியப் பாடலான "வந்தே மாதரம்"-மின் 150-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, நாடாளுமன்றத்தில் நடைபெறும் நீண்ட விவாதத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று தொடங்கி வைக்கிறார். வங்காள எழுத்தாளர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய இந்த பாடலின் 150-வது ஆண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த விவாதம் நடத்தப்படுகிறது. இந்த கலந்துரையாடலுக்கு எட்டு மணி நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், மக்களவையில் இன்று பிரதமரின் உரையுடன் விவாதம் தொடங்கும். ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை விவாதத்தை தொடங்கி வைக்க உள்ளார். இந்த விவாதத்தில், "வந்தே மாதரம்" பாடல் தொடர்பான பல முக்கியமான மற்றும் அறியப்படாத உண்மைகள் நாட்டு மக்களுக்கு தெரிய வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பின்னணி

அரசியல் பின்னணி

சமீபத்தில் பிரதமர் மோடி, 1937 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி, தேசியப் பாடலில் இருந்த முக்கிய பத்திகளை நீக்கி, "பிரிவினைக்கான விதைகளை விதைத்தது" என்று குற்றம் சாட்டியிருந்தார். இந்தப் பாடலின் முக்கியத்துவத்தை இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் நோக்குடன், கடந்த நவம்பர் 7 ஆம் தேதி வந்தே மாதரத்தின் 150-வது ஆண்டு விழாக் கொண்டாட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் விவாதத்தின் போது, அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் வங்காள மொழியில் பேசவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement