கோவை-திண்டுக்கல் இடையே முன்பதிவில்லா சிறப்பு ரயில் சேவை
தீபாவளி பண்டிகை நாளை(நவ.,12)நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில், மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு தங்கள் பயணத்தினை மேற்கொண்டு வருகிறார்கள். இதுபோன்ற பயணிகளை வசதிக்காக தமிழக அரசு சிறப்பு பேருந்துகளை இயக்க உத்தரவுகளை பிறப்பித்துள்ளதோடு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்நிலையில், கோவை-திண்டுக்கல் இடையேயான வழித்தடத்தில் இன்று(நவ.,11) முதல் நவம்பர்.14ம் தேதிவரை முன்பதிவில்லா சிறப்பு ரயில்கள் இயக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த ரயில்கள் இன்று காலை 9.20 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு 10.13க்கு பொள்ளாச்சியை அடைந்திருக்கும். பின்னர் 10.15 மணிக்கு புறப்பட்டு 11மணிக்கு உடுமலைப்பேட்டைக்கு சென்றடையும். அங்கிருந்து 11.01க்கு கிளம்பி 11.38க்கு பழனி சென்றடையும். மீண்டும் 11.43க்கு அங்கிருந்து புறப்பட்டு பிற்பகல் 1.00மணிக்கு திண்டுக்கல்லை அடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.