Loading...
கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு: இன்று இரவு சென்னை வருகிறார் அமித் ஷா
இன்று இரவு சென்னை வருகிறார் அமித் ஷா

கோவளத்தில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு: இன்று இரவு சென்னை வருகிறார் அமித் ஷா

எழுதியவர் Venkatalakshmi V
Aug 19, 2026
09:29 am

செய்தி முன்னோட்டம்

மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தென் மாநில முதல்வர்கள் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று இரவு டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் தமிழகம் வருகிறார். மாமல்லபுரம் அருகே உள்ள கோவளத்தில் அமைந்திருக்கும் தனியார் நட்சத்திர விடுதியில் இந்த முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடைபெறும் இந்த மாநாட்டில், தென் மாநிலங்களின் தலைமை நிர்வாகிகளும் அதிகாரிகளும் கலந்துகொள்கின்றனர்.

பங்கேற்கும் முதல்வர்கள்

தென் மாநில முதல்வர்கள் பங்கேற்பு

இந்த மாநாட்டில்தமிழக முதல்வர், கர்நாடக முதல்வர், கேரள முதல்வர், ஆந்திர முதல்வர், தெலங்கானா முதல்வர் மற்றும் புதுச்சேரி முதல்வர் ஆகியோர் நேரில் பங்கேற்கின்றனர்.

இவர்களை தவிர, ஆறு மாநிலங்களின் தலைமைச் செயலாளர்கள் மற்றும் பல்வேறு அரசுத் துறைகளின் ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ள உள்ளனர்.

இன்று இரவு சென்னை வந்தடையும் அமித் ஷா, நேரடியாக கோவளத்தில் உள்ள விடுதிக்குச் சென்று அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இரவு விருந்தில் முதல்வர்களுடன் பங்கேற்கிறார்.

நாளை மாநாட்டை முடித்த பின்னர், மாமல்லபுரத்தில் உள்ள புகழ்பெற்ற கடற்கரை கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்யத் திட்டமிட்டுள்ளார்.

அதன் தொடர்ச்சியாக, மீண்டும் சென்னை திரும்பும் அவர் அங்கிருந்து டெல்லி புறப்பட்டுச் செல்கிறார்.

ADVERTISEMENT