2023-24ம் ஆண்டிற்கான கல்வித்துறை சார்ந்த பட்ஜெட் தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
செய்தி முன்னோட்டம்
2023ம்ஆண்டிற்கான முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஜன 31 அன்று துவங்கியது.
இதனை தொடர்ந்து நேற்று (பிப்.1) மத்திய நிதியமைச்சர் 2023-24ம் ஆண்டிற்கான பட்ஜெட்டினை தாக்கல் செய்தார். இதில் கல்வித்துறை சார்ந்த பட்ஜெட் விவரங்கள் இதோ,
2014ம்ஆண்டு 157மருத்துவ கல்லூரிகளோடு இணைத்து நாடு முழுவதும் புதிய 157நர்சிங் கல்லூரிகள் அமைக்கப்படும்.
நாடு முழுவதும் தரமான புத்தகங்கள் பிராந்தியமொழிகள் மற்றும் ஆங்கிலத்தில் டிஜிட்டல் நூலகங்கள் அமைக்கப்படும்.
பழங்குடியின பகுதியில் உள்ள ஏகலைவா மாதிரி உறைவிட பள்ளிகளில் அடுத்த 3ஆண்டுகளில் 38,000புதிய ஆசிரியர்கள், பணியாளர்கள் நியமனம் செய்யப்படுவார்கள்.
இதன் மூலம், 740ஏகலைவா பள்ளிகளில் படிக்கும் 3.5 லட்ச பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி வழங்கமுடியும்.
பொறியியல் மற்றும் அதனை சார்ந்த தொழில்களில் 5ஜி செயலிகளுக்கு 100 ஆய்வகங்கள் உருவாக்கப்படும்.
ஐசிஎம்ஆர் ஆய்வகங்கள்
கடைக்கோடி மக்களுக்கும் எழுத்தறிவு கிடைக்க வழிவகை
மேலும் எழுத்தறிவு சார்ந்து இயங்கும் தனியார் என்.ஜி.ஓ.க்களுடன் இணைந்து பாரம்பரிய நூலகங்கள் மேம்படுத்தப்படும்.
நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களுக்கும் எழுத்தறிவு கிடைக்க வழிவகை செய்யப்படும்.
கல்வி நிறுவனங்களில் செயற்கை நுண்ணறிவு திறனாய்வு மையங்கள் அமைக்கப்படும்.
ஆசிரியர் பயிற்சி திட்டம் புத்தாக்க முறையில் மேம்படுத்தப்பட்டு, ஐசிடி முறை அமல்படுத்தப்படும்.
மருத்துவ துறையில் ஆய்வுகளை ஊக்குவிக்க ஆராய்ச்சி துறை மேம்படுத்தப்படும்.
ஐசிஎம்ஆர் ஆய்வகங்களை அரசு, தனியார் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
2047ம் ஆண்டு 40 வயதிலான மக்களுக்கு ரத்த சோகை முற்றிலும் இல்லாமல் இருக்க திட்டங்கள் அமல்படுத்தப்படும்.
இது போல் பல அறிவிப்புகள் பட்ஜெட் தாக்கலில் குறிப்பிடப்பட்டுள்ளது.