Page Loader
பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள்
சீரியஸான பட்ஜெட் உரையின் நடுவே நடைபெற்ற சுவாரசிய நிகழ்வுகள்

பட்ஜெட் 2023-24: நிதியமைச்சரின் சீரியஸான பட்ஜெட் உரையின் ஊடே நடைபெற்ற, சில சுவாரஸ்ய தருணங்கள்

எழுதியவர் Venkatalakshmi V
Feb 02, 2023
08:37 am

செய்தி முன்னோட்டம்

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், 2023-2024 ஆண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நேற்று (பிப்., 1) தாக்கல் செய்தார். மிகவும் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்த பட்ஜெட் உரையின் நடுவே சில சுவாரஸ்ய நிகழ்வுகளும் நடைபெற்றன. அவை: புதிய பட்ஜெட்டை தாக்கல் செய்யும் போது, ​​நிர்மலா சீதாராமன், பல நேரங்களில் பிரதமர் நரேந்திர மோடி வழியில் 'ஒரு சொல் இரு பொருள்' தரும்படி பேசினார். உதாரணத்திற்கு, 'மிஷ்டி' என்றால் வங்காள மொழியில் 'இனிப்பு' என்று பொருள். அந்த பொருள்படும் படி, மேற்கு வங்கத்தில் உள்ள சதுப்புநில காடுகளை பாதுகாக்கும் விதமாக, 'மிஷ்டி' என்ற திட்டத்தையும் அறிவித்தார்.

ட்விட்டர் அஞ்சல்

பழைய அரசு வாகனங்களை மாற்ற முடிவு!

பட்ஜெட்

குறைந்த நேரத்தில் முடிந்த பட்ஜெட் கூட்ட தொடர்

சீதாராமன் தனது உரையின் போது, ​​மாசுபடுத்தும் பழைய அரசு வாகனங்களை மாற்றுவது பற்றி பேசும்போது, ​​'மாசுபடுத்துதல்' (polluting) என்ற வார்த்தையை 'அரசியல்' (political) என்று மாற்றி பேசினார். இது நாடாளுமன்றத்தில் சிரிப்பலையை ஏற்படுத்தியது. இந்த வருடம், நிதி அமைச்சர், தனது ஐந்தாவது மத்திய பட்ஜெட் உரையை, 87 நிமிடங்களில் முடித்தார். இதுவரை அவர் ஆற்றிய உரையிலேயே இதுதான் குறைந்த நேரத்தில் முடிக்கப்பட்ட உரை ஆகும். 2022 இல், அவர் 92 நிமிடங்களில் தனது உரையை முடித்தார். அதற்க்கு முந்தைய ஆண்டு, ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் பேசினார். 2020ஆம் ஆண்டில், 2 மணிநேரம் 40 நிமிடங்கள் அவர் பேசிய உரையே, மிக நீண்ட பட்ஜெட் உரை ஆகும்.