இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்புத் திட்டங்கள் உலகத்தரம் வாய்ந்தவை; CITES அறிக்கை பாராட்டு
செய்தி முன்னோட்டம்
வனவிலங்குகள் மற்றும் தாவரங்களின் அச்சுறுத்தப்பட்ட இனங்களின் சர்வதேச வர்த்தகத்திற்கான மாநாட்டின் (CITES) செயலகம், இந்தியாவின் வனவிலங்குப் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஒரு முக்கிய அங்கீகாரத்தை வழங்கியுள்ளது. ஐநா சுற்றுச்சூழல் திட்டத்தின் (UNEP) நிர்வாக அமைப்பான CITES, வந்தாரா வளாகத்தின் ஒரு பகுதியாகச் செயல்படும் கிரீன்ஸ் விலங்குகள் மீட்பு மற்றும் மறுவாழ்வு மையம் (GZRRC) மற்றும் ராதா கிருஷ்ணா கோயில் யானைகள் நல அறக்கட்டளை (RKTEWT) ஆகிய நிறுவனங்கள், விலங்குகளின் பராமரிப்புக்காக மிகவும் உயர்ந்த தரத்தில் செயல்படுவதாகத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. உஸ்பெகிஸ்தானில் நடைபெறவுள்ள CITES நிரந்தரக் குழுவின் 79வது கூட்டத்திற்காகத் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கையில், வந்தாரா வசதிகளின் மேம்பட்ட உறைவிடங்கள் மற்றும் உலகத் தரம் வாய்ந்த கால்நடை மருத்துவப் பராமரிப்பு ஆகியவை சிறப்பாகப் பாராட்டப்பட்டுள்ளன.
விலங்குகள்
விலங்குகள் பராமரிப்பு மற்றும் உறைவிடம்
அந்த அறிக்கையில், "விலங்குகளின் பராமரிப்பு மற்றும் உறைவிடங்களுக்காக இந்த மையங்கள் பொருத்தமான வகையில் அமைக்கப்பட்டுள்ளன என்பதில் CITES செயலகத்திற்கு எந்தச் சந்தேகமும் இல்லை" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த நிறுவனங்கள் மேம்பட்ட சிகிச்சைகளை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளன. இந்தச் சிகிச்சை முறைகள் சர்வதேச அளவில் பகிரப்பட வேண்டும் என்றும் CITES செயலகம் ஊக்குவித்துள்ளது. CITES அமைப்பின் முக்கியக் கண்டுபிடிப்புகள், இந்த மையங்களின் சட்டபூர்வமான மற்றும் நெறிமுறை செயல்பாடுகளை உறுதிப்படுத்துகின்றன. CITES மற்றும் இந்தியச் சட்டங்களுக்கு முழுமையாகக் கட்டுப்பட்டு, தேவையான ஆவணங்கள் இன்றி எந்தவொரு விலங்கும் இந்தியாவிற்குள் இறக்குமதி செய்யப்படவில்லை என்பதைச் செயலகம் வெளிப்படையாக உறுதிப்படுத்தியுள்ளது.
வணிக நடவடிக்கைகள்
வணிக நடவடிக்கைகள் கிடையாது
விலங்குகள் அல்லது அவற்றின் சந்ததிகளை விற்பனை செய்வது தொடர்பான வணிக நடவடிக்கைகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும், இறக்குமதி செய்யப்பட்ட விலங்குகள் முதன்மையாக வணிக நோக்கங்களுக்காகப் பயன்படுத்தப்படுவதில்லை என்றும் அறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது. இங்குள்ள இனப்பெருக்கத் திட்டங்கள், இனங்களை எதிர்காலத்தில் வனப்பகுதிக்கு விடுவிக்கவும், உள்நாட்டிலும் உலக அளவிலும் வனவிலங்கு எண்ணிக்கையை மீட்டெடுக்கவும் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன என்று மேலாண்மை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த வசதிகள், அழியும் நிலையில் உள்ள ஆசியச் சிங்கங்களுக்கு வெற்றிகரமாக இனப்பெருக்கத் திட்டத்தைத் தொடங்கியுள்ளன. மேலும், ஆபத்தான நிலையில் உள்ள ஸ்பிக்ஸ் மக்காவ் போன்ற வெளிநாட்டுப் பறவைகளுக்கான இனப்பெருக்கத் திட்டமும் நடைபெற்று வருவது, வனவிலங்கு பாதுகாப்புத் துறையில் இந்தியாவின் அளவிடக்கூடிய முன்னேற்றத்தை ஐநா அறிக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.