
அண்ணா பல்கலைக்கழக பதவியினை ராஜினாமா செய்தார் உதயநிதி ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாடு மாநிலத்தில் திமுக ஆட்சியேற்ற பின்னர் பல்வேறு பல்கலைக்கழங்களுக்கு ஆட்சிமன்ற குழு உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்டார்கள்.
அதன்படி சென்னை அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராக சேப்பாக்கம்-திருவெல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நியமிக்கப்பட்டார்.
அண்ணா பல்கலைக்கழக ஆட்சி மன்ற குழுவில் அலுவல் சாரா உறுப்பினராக 3 ஆண்டுகளுக்கு உதயநிதி ஸ்டாலின் நியமிக்கப்படுவதாக சட்டப்பேரவை தலைவர் அப்பாவு அப்போது அறிவித்திருந்தார்.
இதனையடுத்து அவர் நியமிக்கப்பட்டு 3 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் தற்போது அப்பதவியினை அவர் ராஜினாமா செய்துள்ளார்.
அவர் தற்போது விளையாட்டுத்துறை அமைச்சராக செயல்பட்டு வருவதால் இப்பதவியினை அவர் ராஜினாமா செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | அண்ணா பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் பதவியில் இருந்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ராஜினாமா
— Thanthi TV (@ThanthiTV) April 20, 2023
கடந்த 2021ம் ஆண்டு முதல் பதவி வகித்த நிலையில் அமைச்சராக பொறுப்பேற்றதை அடுத்து விலகினார்#UdhayanidhiStalin #AnnaUniversity pic.twitter.com/K0GdEPC8rr