LOADING...
பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு: 2 முக்கிய குற்றவாளிகள் கைது 

பெங்களூரு ராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு வழக்கு: 2 முக்கிய குற்றவாளிகள் கைது 

எழுதியவர் Sindhuja SM
Apr 12, 2024
10:14 am

செய்தி முன்னோட்டம்

பெங்களூரு ராமேஸ்வரம் ஓட்டலில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தின் முக்கிய குற்றவாளியை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) மேற்கு வங்கத்தில் வைத்து கைது செய்துள்ளது. தலைமறைவாக இருந்த குற்றவாளிகள் கொல்கத்தாவில் பதுங்கியிருந்த இடத்தில் இருந்து கைது செய்யப்பட்டனர். முசாவிர் ஹுசைன் ஷாசிப் என்பவர் ஓட்டலில் IEDஐ வைத்ததாகவும், குண்டுவெடிப்பைத் திட்டமிட்டு செயல்படுத்தியதற்குப் பின்னணியில் அப்துல் மதின் தாஹா என்பவர் மூளையாக இருந்ததாகவும் NIA கூறியுள்ளது. அவர்கள் இருவரும் ஏற்கனவே 2020 பயங்கரவாத வழக்கில் தேடப்பட்டு வந்தவர்கள் ஆவர். அப்துல் மதீன் தாஹா ISIS-ன் பெங்களூர் மாட்யூல் என்று அறியப்படும் அல் ஹிந்த் உடன் தொடர்பில் இருந்ததாக NIA கூறியுள்ளது.

பெங்களூரு

பொய்யான அடையாளத்துடன் சுற்றி திரிந்த குற்றவாளிகள் 

குற்றம் சாட்டப்பட்டவர்கள் தவறான அடையாளத்துடன் சுற்றி திரிந்ததாக என்ஐஏ தெரிவித்துள்ளது. மத்திய புலனாய்வு அமைப்புகள் மற்றும் மேற்கு வங்கம், தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளாவைச் சேர்ந்த காவல்துறையினருக்கு இடையேயான ஒருங்கிணைந்த நடவடிக்கையில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டதாக NIA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. மார்ச் 29 அன்று, பயங்கரவாத எதிர்ப்பு நிறுவனம், குற்றம் சாட்டப்பட்ட இருவரின் புகைப்படங்களையும் விவரங்களையும் வெளியிட்டது. குற்றவாளிகளை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம், முக்கிய குற்றவாளிகளுக்கு தளவாட உதவி செய்த சிக்கமகளூரைச் சேர்ந்த முஸம்மில் ஷரீப் ஒருவரை என்ஐஏ கைது செய்து காவலில் எடுத்தது.