Page Loader
பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள்<a target="_blank" href=" https://tamil.newsbytesapp.com/news/india/delhi " rel="noopener" data-mce-href="https://tamil.newsbytesapp.com/news/india/delhi" style="font-family: Inter, Montserrat, sans-serif; font-size: 14px;"></a>
அடுக்குமாடி குடியிருப்பின் கதவை நோக்கி சுட்ட இரண்டு மர்ம நபர்கள் சிசிடிவியில் பதிவு

பட்டப்பகலில் அடுக்குமாடி குடியிருப்பில் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் - சிசிடிவியில் பதிவான திடுக்கிடும் காட்சிகள்

எழுதியவர் Sayee Priyadarshini
Apr 24, 2023
09:15 am

செய்தி முன்னோட்டம்

டெல்லியில், அடுக்குமாடி குடியிருப்பின் ஒன்றை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தென்கிழக்கு டெல்லி சித்தார்த் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் நேற்று இந்த சம்பவம் நடந்தது. குற்றம் சாட்டப்பட்டவர்கள், அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியின் கதவை நோக்கி இரண்டு முறை துப்பாக்கியால் சுட்டனர். அதற்குப் பிறகு, பின்னர் அவர்கள் தரை தளத்தை நோக்கி தப்பி ஓடிவிட்டனர். முகமூடி அணிந்த நபர்கள் தப்பிச் செல்வதற்கு முன் தரை தளத்திலுள்ள மற்றொரு வீட்டின் ஜன்னலை நோக்கி மூன்று முறை துப்பாக்கியால் சுட்டனர் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் அங்கிருக்கும் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. இதைச் செய்த நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post