LOADING...
TVK Stampede: கரூர் தவெக கூட்ட நெரிசலில் 38 பேர் பலியானதற்கு யார் காரணம்? என்ன நடந்தது? ஒரு அலசல்
கூட்ட நெரிசலில் 36 பேர் இதுவரை உயிரிழந்துவிட்டனர்

TVK Stampede: கரூர் தவெக கூட்ட நெரிசலில் 38 பேர் பலியானதற்கு யார் காரணம்? என்ன நடந்தது? ஒரு அலசல்

எழுதியவர் Venkatalakshmi V
Sep 27, 2025
11:50 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முன்னிட்டு, தவெக தலைவர் விஜய் கரூரில் பரப்புரை மேற்கொண்டார். அவரது பேச்சுக்குப் பிறகு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 38 பேர் இதுவரை உயிரிழந்துவிட்டனர். மேலும் 60ற்கும் மேற்பட்டோர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். இந்த நெஞ்சை உலுக்கும் சோக நிகழ்வில் நடந்தது என்ன? யார் காரணம் என்பதை பற்றி ஒரு பார்வை:

விவரம்

பொதுக்கூட்டத்தில் நடந்தது என்ன?

தவெக குழு, பரப்புரை நடத்த லைட் ஹவுஸ் கார்னர், உழவர் சந்தை போன்ற பெரிய இடங்களை காவல்துறையிடம் கோரினார்கள். காவல்துறை முதலில் லைட் ஹவுஸ் கார்னரை ஒதுக்குவதாக கூறினாலும், பின்னர் மறுத்தது எனக்கூறப்படுகிறது. அதற்கு பதிலாக, முந்தைய நாளிலேயே இபிஎஸ் பிரசாரம் நடந்த சிறிய வேலுசாமிபுர இடத்தை ஒதுக்கியது. இது கூட்ட நெரிசலுக்கு முக்கிய காரணம் என ஒரு தரப்பினர் கூறுகின்றனர். லைட் ஹவுஸ் கார்னரில் 50,000க்கும் மேற்பட்டோர் சேரலாம், எனினும், 10,000க்கும் மேற்பட்டோர் தான் கூடுவார்கள் எனக் கணிக்கப்பட்டது. அதே சமயம், வேலுசாமிபுரம் சிறிய இடம்; அங்கு கட்டுக்கடங்காத கூட்டம் மற்றும் ஒருவரை ஒருவர் தள்ளிச் செல்வது போன்ற நிலை ஏற்பட்டது.

தவறு

தவறு யார் பக்கம்?

ஒரு சில ஊடக செய்திகள் படி, விஜய்யை காண தொண்டர்கள் காலை 11 மணி முதல் நீர், உணவு இல்லாமல் காத்திருந்தனர் எனவும், இதனால் பலர் மயக்கமடைந்தனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் TVK காவல்துறை அனுமதி கேட்டு வழங்கிய மனுவில், பொதுக்கூட்டம் 3 மணியளவில் துவங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, தவெக அறிக்கையின்படி, பெண்கள், குழந்தைகள், வயதானவர்கள் கூட்டத்திற்கு வர வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டு, பெரும் எண்ணிக்கையிலான பெண்கள், குழந்தைகள் கூட்டத்தில் கலந்தனர். இதுவும் நெரிசலை அதிகரித்தது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

எதிர்க்கட்சி

BJP தலைவர் அண்ணாமலை கூறியது

கரூர் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் பலர் உயிரிழந்த சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, மத்திய அமைச்சர்கள் மற்றும் தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் பலர் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளனர். தமிழக பிஜேபி தலைவர் அண்ணாமலை, காவல்துறை சரியான இடத்தை ஒதுக்காதது, போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் இல்லாதது தான் இத்தகைய பெருந்துயர் நடக்க காரணம் என அறிக்கை வெளியிட்டுள்ளார். அதோடு, பிரச்சாரத்தின் போது மின்சாரம் தடை செய்யப்பட்டதாகவும் கூறினார். இந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் உயிரிழந்தோருக்கு உடனடி நிவாரணம் அளிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post