கொளத்தூர் தவெக எம்.எல்.ஏ வி.எஸ். பாபுவுக்கு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை: MGM மருத்துவமனை அறிக்கை
செய்தி முன்னோட்டம்
கடுமையான மூச்சுத் திணறல் காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கொளத்தூர் தொகுதி தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) MLA வி.எஸ். பாபுவின் உடல்நிலை குறித்த மருத்துவ அறிக்கையை MGM மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. சுவாசக் கோளாறு காரணமாக நேற்று வி.எஸ். பாபு MGM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு தேவையான மருத்துவ மேலாண்மை மற்றும் செயற்கைச் சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலதுறை மருத்துவ நிபுணர்கள் அடங்கிய குழுவின் நெருங்கிய கண்காணிப்பில் உள்ள அவரது உடல்நிலை தற்போது தேவையான ஆதரவு சிகிச்சைகளுடன் சீராகவும் நிலையாகவும் உள்ளது எனவும் கூறப்பட்டுள்ளது.
உடல்நலக்குறைவு
கூட்டத்தொடருக்குப் பின் ஏற்பட்ட உடல்நலக்குறைவு
சமீபத்தில் முடிவடைந்த தமிழ்நாடு சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் தீவிரமாக பங்கேற்று வந்த வி.எஸ். பாபுவுக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டது தவெக தொண்டர்களிடையே கவலையை ஏற்படுத்தியது.
இருப்பினும், அவரது உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், இன்னும் சில நாட்கள் தொடர் கண்காணிப்பிற்குப் பிறகு அவர் பூரண குணமடைந்து வீடு திரும்புவார் என்றும் மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.