"முழு அதிகாரமும் விஜய்க்கே!" - த.வெ.க. பொதுக்குழுவில் 12 தீர்மானங்கள் நிறைவேற்றம்
செய்தி முன்னோட்டம்
நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சிறப்பு பொதுக்குழுக் கூட்டம் இன்று மாமல்லபுரத்தில் நடைபெற்றது. 40 நாட்களுக்குப் பிறகு முதன்முறையாக கட்சி நிகழ்வு ஒன்றில் விஜய் கலந்துகொண்ட இந்தக் கூட்டத்தில், கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், "இன்று அரசியலின் மையப்புள்ளி நம் தலைவர் தான்" என்று பேசினார். பொதுக்கூட்டம் தொடங்குவதற்கு முன்னர், விஜய் மேடை ஏறிய பின்னர், கரூரில் உயிரழந்தவர்களுக்காக ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்தச் பொதுக்கூட்டத்தில், பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து மொத்தம் 12 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
கரூர் சொந்தங்களுக்காக..... பொதுக்குழுவில் மவுன அஞ்சலி செலுத்திய த.வெ.கவினர்.. நீதி வெல்லும் என கூறிய ராஜ்மோகன்...#TVK | #TVKVijay | #TVKLeader | #Mahabalipuram | #TVKGeneralBodyMeeting | #VijaySpeech | #TVKParty | #TVKPartyUpdates | #தமிழகவெற்றிக்கழகம் | #PolimerNews pic.twitter.com/UO8tp4q1Ch
— Polimer News (@polimernews) November 5, 2025
அம்சங்கள்
12 தீர்மானங்களின் முக்கிய அம்சங்கள்
2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை விஜய் தலைமையில் சந்திப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. மேலும், தேர்தல் கூட்டணி தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுக்கும் முழு அதிகாரம் விஜய்க்கு வழங்கிட பொதுக்குழு ஒப்புதல் அளித்தது. கரூர் பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பொதுக்குழுவில் இரங்கல் தெரிவித்து முதல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படுவதற்குக் கண்டனம் தெரிவித்தும், வெறும் கடிதங்களை மட்டும் எழுதிவிட்டு அமைதியாக இருக்கும் திமுக அரசைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கோவை மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்றும், இச்சம்பவம் தொடர்பாக திமுக அரசிற்கு கண்டனம் தெரிவித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மாநிலத்தில் பெண்களின் பாதுகாப்பை வலியுறுத்தித் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.