LOADING...
2026 சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவை வீழ்த்த மீண்டும் NDA-வில் டிடிவி தினகரன்! 
NDA கூட்டணியில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார்

2026 சட்டப்பேரவைத் தேர்தல்: திமுகவை வீழ்த்த மீண்டும் NDA-வில் டிடிவி தினகரன்! 

எழுதியவர் Venkatalakshmi V
Jan 21, 2026
01:52 pm

செய்தி முன்னோட்டம்

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பெரும் மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றன. கடந்த செப்டம்பர் 2025-ல் தேசிய ஜனநாயக கூட்டணியிலிருந்து வெளியேறிய அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (AMMK), இன்று மீண்டும் அக்கூட்டணியில் இணைந்துள்ளதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அறிவித்துள்ளார். சென்னையில் இன்று காலை செய்தியாளர்களைச் சந்தித்த அவர், "தமிழகத்தில் நிலவும் தீய சக்தியான திமுக ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்பதே எங்களின் முதன்மையான நோக்கம். அதற்காகப் பழைய கசப்புகளை மறந்து, ஒருமித்த கருத்துடன் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் மீண்டும் இணைந்துள்ளோம். விட்டுக்கொடுத்துப் போவது பலவீனம் அல்ல, அது தமிழக மக்களின் நலனுக்கான ஒரு புதிய தொடக்கம்," என்று தெரிவித்தார்.

கூட்டணி

TVK க்கு டாடா; NDA க்கு ஆதரவு

அறிவிப்பைத் தொடர்ந்து, பாஜகவின் தமிழகத் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயலை நேரில் சந்தித்துத் தனது ஆதரவை உறுதிப்படுத்தினார் TTV தினகரன். வரும் ஜனவரி 23-ஆம் தேதி, செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கும் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட கூட்டணி கட்சி தலைவர்களுடன் டிடிவி தினகரனும் பங்கேற்க உள்ளார். முன்னதாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (TVK) கூட்டணி அமைக்க அமமுக முயற்சி செய்ததாக கூறப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் பாஜக தலைமையிலான கூட்டணியிலேயே அவர் தஞ்சமடைந்துள்ளது தமிழக அரசியலில் ஒரு முக்கியத் திருப்பமாகக் கருதப்படுகிறது.

Advertisement