திருச்சியை உறையவைத்த லலிதா ஜுவல்லரி கொள்ளை சம்பவம், பாகம் 2 - க்ரைம் ஸ்டோரி
இந்த வார Newsbytes.,இன் க்ரைம் ஸ்டோரி 2ம் பாகம் : திருச்சி லலிதா ஜுவல்லரி கடையில் கடந்த 2019ம்ஆண்டு அக்டோபர் மாதம் 2ம்தேதி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய கொள்ளை சம்பவம் அரங்கேறியது. இதுகுறித்து போலீசார் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் திருவாரூரை சேர்ந்த மணிகண்டன், அவரது கூட்டாளி சுரேஷின் தாய் கனகவல்லி ஆகியோரை போலீசார் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 4.8கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தில் முருகன் என்பவர் தான் மூளையாக செயல்பட்டுள்ளார் என்றும், இவர் ஏற்கனவே ஏடிஎம் கொள்ளை போன்றவற்றில் சம்பந்தப்பட்டுள்ளார் என்றும் கண்டறியப்பட்டது. இதனிடையே முருகனின் அண்ணன் மகன் முரளியை போலீசார் கைதுச்செய்து விசாரணை நடத்தினர். இதற்காக காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை நடத்திவந்த நிலையில், முருகன் பெங்களூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
லலிதா-ஜுவல்லரி கடையில் திருடுபோன 28 கிலோ தங்கம்
அதன்பின் பெங்களூர் போலீசார் பஞ்சாப் வங்கிக்கொள்ளை சம்பவமும் இவர்கள் ஏற்படுத்தியது தான் என தெரியவந்தநிலையில் அவரை தங்கள் காவலில் எடுத்து விசாரித்தனர். அப்போது, முருகன் லலிதா-ஜுவல்லரி நகைக்கடையில் கொள்ளையடித்து புதைத்து வைத்திருந்த நகைகளை எடுத்துக்கொடுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து அவரை திருச்சி போலீசார் நீதிமன்ற உத்தரவின்பேரில் காவலில் எடுத்து திருச்சி லலிதா-ஜுவல்லரி கடையில் திருடுபோன 28கி.,தங்கத்தில் 25.5கி.,தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் மீதமுள்ள நகை குறித்து முருகனிடம் விசாரணை நடத்தினர். திருடுபோனவற்றுள் பெரும்பாலான நகைகளை போலீசார் பறிமுதல் செய்யப்பட்டதையடுத்து அவர் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டார். இது மட்டுமட்டுமின்றி முருகன் மீது தமிழகத்தில் 12வழக்குகளும், கர்நாடகாவில் 46வழக்குகளும் பதிவாகியுள்ளதால் அவர் அனைத்து வழக்குகளிலும் ஜாமீன் பெறப்பட்டால் மட்டுமே சிறையிலிருந்து வெளிவரமுடியும் என்று காவல்துறை வட்டாரத்தில் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.