திருச்சி கொள்ளிடம் ஆற்றுக்குள் சாய்ந்து விழுந்த உயர் மின்னழுத்த கோபுரம்
திருச்சி காவேரி மற்றும் கொள்ளிடம் ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. நேற்று இரவு, திருவானைக்காவல் கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள நேப்பியர் பாலம் அருகே அமைந்துள்ள உயர் மின்னழுத்த கோபுரம் ஒன்று ஆற்று வெள்ளத்தில் முழுமையாக சாய்ந்தது. கிட்டத்தட்ட ஒரு லட்சத்து 10 ஆயிரம் மெகாவாட் (110 கேவி) உயர் மின்னழுத்தம் கொண்ட ராட்சத கோபுரம் அது. ஏற்கனவே வெள்ள நீரின் வேகத்தில் அஸ்திவாரம் சாய்ந்த நிலையில், இன்று அதிகாலை உயர் மின்னழுத்த கோபுரம் ஆற்றில் விழுந்தது. கூடவே கோபுரத்தில் கட்டப்பட்டிருந்த மின் கம்பிகள் பாலத்தின் மீது விழுந்தன. ஆனால், முன்னெச்சரிக்கையாக இந்த மின் கோபுரத்திற்கு செல்லும் மின்சாரம் நேற்று காலையிலேயே துண்டிக்கப்பட்டதாலும், பாலத்திலும் போக்குவரத்தை தடை செய்யப்பட்டிருந்தததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.