LOADING...
வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவில் உணரப்பட்ட நில அதிர்வு
கொல்கத்தா மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் பல இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டது

வங்கதேசத்தில் நிலநடுக்கம்: கொல்கத்தாவில் உணரப்பட்ட நில அதிர்வு

எழுதியவர் Venkatalakshmi V
Nov 21, 2025
11:39 am

செய்தி முன்னோட்டம்

பங்களாதேஷ் தலைநகர் டாக்கா அருகே இன்று (வெள்ளிக்கிழமை) ரிக்டர் அளவில் 5.5 ரிக்டர் அளவுள்ள நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக, இந்தியாவின் கொல்கத்தா மற்றும் வடகிழக்குப் பகுதிகளின் பல இடங்களில் நில அதிர்வுகள் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தின் மையப்பகுதி டாக்காவிலிருந்து சுமார் 50 கி.மீ தொலைவில் உள்ள நர்சிங்டியில் (Narsingdi) அமைந்திருந்தது. நிலநடுக்கம் 10 கி.மீ ஆழத்தில் மையம் கொண்டிருந்தது. கொல்கத்தாவில் சுமார் காலை 10:10 மணியளவில் சில விநாடிகளுக்கு நில அதிர்வு உணரப்பட்டது. அதேபோல கூச் பெஹார், தெற்கு மற்றும் வடக்கு தினாஜ்பூர் உட்பட மேற்கு வங்கத்தின் பிற பகுதிகளிலும் அதிர்வுகள் இருந்தன. கௌஹாத்தி, அகர்தலா, மற்றும் ஷில்லாங் போன்ற வடகிழக்கு நகரங்களிலும் அதிர்வுகள் பதிவாகின.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post