பொதுமக்கள் கவனத்திற்கு! எழும்பூர் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் இந்த ரயில்கள் நிற்காது என அறிவிப்பு!
செய்தி முன்னோட்டம்
ஹைதராபாத், பெங்களுருவில் இருந்து சென்னைக்கு வரும் விரைவு ரயில்கள், எழும்பூர் மற்றும் பெரம்பூரில் நிற்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
பராமரிப்பு பணிகள் காரணமாக இந்த மாற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல செகந்திராபாத் மற்றும் பாட்னா செல்லும் ரயில்களும் இவ்வழி தடத்தில் நிற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தினசரி பணிக்கு செல்வோர் உட்பட கிட்டத்தட்ட 12000 மக்கள் பாதிக்கப்படுவார்கள் என தினமணி செய்தி வெளியிட்டுள்ளது.
மாற்று ஏற்பாடு
பயணிகள் வசதிக்காக மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது
மேற்கூறிய ரயில்கள் இந்த நிறுத்தங்களுக்கு பதிலாக செங்கல்பட்டு மற்றும் திருத்தணியில் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போல சென்னையிலிருந்து புவனேஸ்வர் வரை செல்லும் அகர்தலா- SMVT பெங்களூரு ஹம் சஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலும் பெரம்பலூர் செல்லாமல், கூடூர் வழியாக ரேணிகுண்டாவிற்கு திருப்பி விடப்பட்டுள்ளது.
இது போல 7 ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் செங்கல்பட்டு மற்றும் திருத்தணியிலிருந்து தங்கள் இடத்தை அடைய எலக்ட்ரிக் ட்ரெயின் வசதியை பயன்படுத்தி கொள்ளுமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் இங்கிருந்து குறைந்த அளவு எலக்ட்ரிக் ட்ரெயின் மட்டுமே திருத்தணி வரை இயக்கப்படுவதால், பொதுமக்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.