மும்பையில் தொடரும் கனமழை: விமான சேவைகள் பாதிப்பு, பள்ளிகள் மூடல்
மும்பையில் இன்று பலத்த மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்ததால், கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நேற்று, மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இடைவிடாத மழை பெய்தது. இதனால், புறநகர் ரயில் சேவைகள் மற்றும் விமானச் செயல்பாடுகள் தடைபட்டன. இதனடியடுத்து, மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. மும்பையின் சில பகுதிகளில் வெறும் 6 மணி நேரத்தில் 300 மி.மீ.க்கும் அதிகமான மழை பெய்தது. இ இன்று காலை 7 மணி வரை மழை நீதித்ததால், சாலைகள் மற்றும் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) மும்பைக்கு இன்று கனமழைக்கான 'ரெட்' அலர்ட் விடுத்துள்ளது.
பள்ளிகள் மூடல்; தேர்வுகள் ஒத்திவைப்பு
ஐஎம்டியின் எச்சரிக்கையை அடுத்து, மும்பை, தானே, நவி மும்பை, பன்வெல், புனே மற்றும் ரத்னகிரி-சிந்துதுர்க்கின் கிராமப்புறங்களில் உள்ள பள்ளிகள் மற்றும் ஜூனியர் கல்லூரிகள் இன்று மூடப்பட்டுள்ளன. மும்பை பல்கலைக்கழகத்தில் இன்று(ஜூலை 9, 2024) நடைபெறவிருந்த அனைத்து தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. நேற்று பெய்த இடைவிடாத மழை காரணமாக மும்பை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் முடங்கின. புறநகர் ரயில் சேவைகள் மற்றும் விமான செயல்பாடுகளை இது பாதித்தது. மத்திய ரயில்வே சேவைகள் குறிப்பிடத்தக்க இடையூறுகளை எதிர்கொண்டன. மும்பை செல்லும் பல வெளியூர் ரயில்களும் சிக்கித் தவித்தன. இன்று அதிகாலை 4.30 மணிக்கு ஹார்பர் லைன் டிராக் இயக்கப்பட்டது. பரேல், காந்தி மார்க்கெட், சங்கம் நகர் மற்றும் மலாட் சுரங்கப்பாதை போன்ற பகுதிகளில் தண்ணீர் தேங்கியுள்ளது.