மெட்ரோ பணிகள் காரணமாக, மெரினா கடற்கரை சாலையில் ஓராண்டிற்கு போக்குவரத்து மாற்றம்
சென்னையில் ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் மெட்ரோ ரயிலின் அடுத்த கட்டமாக, phase -2 திட்ட பணிகள் தற்போது துரிதமாக நடைபெற்று வருகிறது. இந்த இரண்டாம் கட்ட பணிகளில், corridor 4 -இன் கீழ், சென்னை கலங்கரை விளக்கு பகுதியில் இருந்து, கோடம்பாக்கம் மேம்பாலம் வரை, 8 கிமீ நீளத்திற்கு, நிலத்தடியில் பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, காந்தி சிலைக்கு பின்னால் இருக்கும், மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், அடுத்த ஒரு ஆண்டிற்கு இதன் சுற்றுப்புற சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
உத்தேசிக்கப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றங்கள்
லூப் ரோடு, காமராஜர் சாலையிலிருந்து வரும் வாகனங்கள் கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக போர் நினைவு சின்னம் செல்ல தடை. மாறாக, அவை, காமராஜர் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். Victoria war memorial- இருந்து வரும் வாகனங்கள், மெரினா கடற்கரை சர்வீஸ் சாலை வழியாக கலங்கரை விளக்கம் நோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. மாறாக, அந்த வாகனங்கள் காமராஜர் சாலை வழியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள். கலங்கரை விளக்கத்தில் இருந்து மெரினா கடற்கரை சர்வீஸ் சாலைக்கு செல்ல விரும்பும் வாகனங்கள் காந்தி சிலைக்கு பின்னால் தடை செய்யப்பட்டபகுதி வரை செல்லலாம். அதன் பிறகு நேராக முன்னோக்கி செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.