Page Loader
இரண்டு மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி
ற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது

இரண்டு மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலத்தில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

எழுதியவர் Venkatalakshmi V
Sep 04, 2024
10:15 am

செய்தி முன்னோட்டம்

தீவிரமடைந்த தென்மேற்கு பருவமழை காரணமாக பொள்ளாச்சி, கோவை நீலகிரி மாவட்டங்களில் கன மழை பெய்தது. அதனால் அப்பகுதியில் உள்ள பிரபல நீர்வீழ்ச்சியான கோவை குற்றாலத்திற்கு அதிக அளவு நீர்வரத்து ஏற்பட்டது. இதன் தொடர்ச்சியாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் சுற்றுலா பயணிகள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவையின் மேற்கு பகுதியில், 35 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது கோவை குற்றாலம். தற்போது அனுமதி வழக்கப்பட்டுள்ளதால், சிறுவாணி மலைத்தொடர்களின் அடிவாரத்தில் வனப்பகுதிக்குள் அமைந்துள்ள இந்த அழகிய நீர்வீழ்ச்சிக்கு தற்போது சுற்றுலா பயணிகளின் கூட்டம் அதிகரித்து வருகிறது.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post