
கனமழை எதிரொலி - திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழக தென்மாவட்டங்களான திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நேற்று(டிச.,17)காலை முதல் அதி கனமழை பெய்து வருகிறது.
இதனால் பெரும்பாலான பகுதிகள் வெள்ளம் சூழ்ந்த காரணத்தினால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.
குறிப்பாக திருநெல்வேலி மாவட்டத்தில் பெருமளவு வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் அதிகனமழை காரணமாக ஏற்கனவே நாளை(டிச.,19)திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட 2 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தமிழக அரசு இந்த இரு மாவட்டங்களுக்கு பொது விடுமுறை அறிவித்துள்ளது.
இதனிடையே, தென்காசி மாவட்டத்தில் வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் நாளை செயல்படும் என்று அம்மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
பொது விடுமுறை
#BREAKING | தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்டங்களுக்கு நாளை (டிச.19) பொது விடுமுறை அறிவித்தது தமிழ்நாடு அரசு
— Sun News (@sunnewstamil) December 18, 2023
ஏற்கனவே 2 மாவட்டங்களிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.#SunNews | #TuticorinRains | #NellaiRains | #Holiday
ட்விட்டர் அஞ்சல்
தென்காசி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
#BREAKING | தென்காசி மாவட்டத்தில் நாளை வழக்கம்போல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும்#SunNews | #Tenkasi | #TNRains | #SchoolLeave pic.twitter.com/JhvON4ZvXn
— Sun News (@sunnewstamil) December 18, 2023