Page Loader
இயந்திரமயமாகும் சுங்க சாவடிகள்:  மத்திய இணை அமைச்சர்
மதுரை விமான நிலையத்தில் பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர்(படம்: Oneindia Tamil)

இயந்திரமயமாகும் சுங்க சாவடிகள்: மத்திய இணை அமைச்சர்

எழுதியவர் Sindhuja SM
Dec 29, 2022
10:43 pm

செய்தி முன்னோட்டம்

இன்னும் 6 மாதங்களில் அனைத்து சுங்க சாவடிகளும் இயந்திரமயமாக்கப்படும் என்று மத்திய இணை அமைச்சர் வி.கே.சிங் தெரிவித்துள்ளார். ஏற்கனவே இருக்கும் சுங்க சாவடிகள் அகற்றப்பட்டு அதற்கு பதிலாக கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பணம் வசூலிக்கும் இயந்திரங்கள் நிறுவப்படும் என்றும் அவர் கூறி இருக்கிறார். சுங்க சாவடிகளால் ஏற்படும் தாமதங்களைக் குறைப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. தமிழகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கு மத்திய சாலை மற்றும் விமானப் போக்குவரத்துத்துறை இணை அமைச்சர் வி.கே.சிங் நேற்று மதுரை வந்தார். அப்போது, செய்தியாளர்களை சந்தித்த இவர், பல முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

மதுரை

மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக மாறுமா?

மதுரை விமான நிலையத்தில் இவர் வந்து இறங்கியபோது செய்தியாளர்கள் இவரிடம் பல கேள்விகளைக் கேட்டனர். அதில் சில கேள்விகளும் அதற்கு இவர் அளித்த பதில்களும் கீழே கொடுக்கப்பட்டள்ளது. கேள்வி: மதுரை விமான நிலையம் ஏன் இன்னும் விரிவாக்கப்படவில்லை? பதில்: மதுரை விமான நிலையத்தை விரிவாக்குவதற்கு தேவையான நிலத்தை தமிழக அரசு இன்னும் ஒப்படைக்கவில்லை. கேள்வி: மதுரை விமான நிலையம் எப்போது சர்வதேச விமான நிலையமாக மாறும்? பதில்: சர்வதேச விமான நிலையமாக இருந்தால் தான் சர்வதேச விமானங்கள் வந்து போகும் என்பது இல்லை. இப்போதும் மதுரைக்கு சர்வதேச விமானங்கள் வந்து போய் கொண்டு தான் இருக்கிறது. விமான சேவைகள் அதிகரிக்கும் போது இது குறித்த ஆலோசனை நடத்தி கொள்ளலாம்.