
சென்னையில் மீண்டும் வந்துவிட்டது ஹாப்-ஆன்; ஹாப்-ஆஃப் வசதி
செய்தி முன்னோட்டம்
சென்னையில், மத்திய பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்திற்கு மாற்றியதையடுத்து பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.
இதை ஈடுகட்டும் விதமாக போக்குவரத்துத்துறை சார்பில் பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்று போக்குவரத்து துறை அமைச்சர், கிளாம்பாக்கத்திலிருந்து ஒரு புதிய ஹாப்-ஆன்; ஹாப்-ஆஃப் வசதி ஒன்றை அறிமுகம் செய்துள்ளார்.
அதன்மூலம், அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில், 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யலாம்.
இந்த திட்டத்தை அறிமுகம் செய்தபோது, போக்குவரத்து பணியாளர்களுக்காக ஒரு புதிய செயலியையும் அறிமுகம் செய்துவைத்தார் அமைச்சர்.
ட்விட்டர் அஞ்சல்
ஹாப்-ஆன்; ஹாப்-ஆஃப் வசதி
மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து… pic.twitter.com/RzNnhMc5Al
— Sivasankar SS (@sivasankar1ss) February 29, 2024