
வேளாங்கண்ணி திருவிழா மற்றும் வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
செய்தி முன்னோட்டம்
சென்ற வாரத்தை போலவே இந்த வாரமும் வார விடுமுறை என்பதால் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தமிழக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.
குறிப்பாக சென்னையிலிருந்து, மதுரை, கன்னியாகுமரி தென் மாவட்டங்களுக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
அதேபோல கோவை, சேலம் போன்ற மாவட்டங்களுக்கும் பேருந்து சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம் நாகை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற வேளாங்கண்ணி தேவாலய திருவிழாவை முன்னிட்டும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 27ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 10ஆம் தேதி வரை 1050 பேருந்துகள் மாநிலம் முழுவதும் இயக்கப்படும்.
பயணிகள் வசதியை கருத்தில் கொண்டு சென்னை, பெங்களூரு, சிதம்பரம், புதுச்சேரி போன்ற ஊர்களிலிருந்தும் நேரடி பேருந்துகள் வேளாங்கண்ணி வரை இயக்கப்படவுள்ளது என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் அஞ்சல்
சிறப்பு பேருந்துகள் இயக்கம்
வேளாங்கண்ணி திருவிழா - 1,050 சிறப்பு பேருந்துகள் இயக்கம்https://t.co/WciCN2SiwX | #Velankanni | #Festival | #SpecialBus | #TNSTC | #SETC | #News7Tamil | #News7TamilUpdates pic.twitter.com/FbxQnCJN3G
— News7 Tamil (@news7tamil) August 20, 2024