LOADING...
நாளை (ஜூன் 30) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு விபரம்!
மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

நாளை (ஜூன் 30) உங்க ஏரியாவில் மின்தடை இருக்கா? மாவட்ட வாரியான முழு விபரம்!

எழுதியவர் Vasuki
Jun 29, 2026
12:31 pm

செய்தி முன்னோட்டம்

தமிழகத்தில் சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் நோக்கில், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் சார்பில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன்படி, நாளை ஜூன் 30, செவ்வாக்கிழமை (30.06.2026) அன்று திண்டுக்கல், விழுப்புரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களின் முக்கியப் பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளதாக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. பொதுமக்கள் தங்களது அன்றாடத் தேவைகளுக்கு ஏற்ப முன்கூட்டியே தகுந்த முன்னேற்பாடுகளைச் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மின்தடை ஏற்படும் பகுதிகளின் விரிவான பட்டியல் பின்வருமாறு:-

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

அரியலூர் மாவட்டம்: (காலை 9:00 - மதியம் 2:00) பெரியகருக்கை துணை மின் நிலையம்: பெரியகருக்கை, சின்னத்துக்குறிச்சி, மேலவல்லம். அய்யூர் துணை மின் நிலையம்: கங்குழி, குளத்தூர், புக்குழி, வல்லம், அய்யூர். பாப்பாகுடி துணை மின் நிலையம்: இரவாங்குடி, நல்லூர், காடுவெட்டி, மேலநிகுழி, பவர்கிரிட் பகுதிகள். ஆண்டிமடம் துணை மின் நிலையம்: வி.ஆர்.பேட்டை, அகரம், நாகம்பந்தல்.

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திண்டுக்கல் மாவட்டம்: (காலை 9:00 - மதியம் 2:00) திண்டுக்கல் 110/22KV துணை மின் நிலையம்: திண்டுக்கல் டவுன், சாணார்பட்டி, எம்.எம்.கோவிலூர், சீலப்பாடி, பாலகிருஷ்ணாபுரம். கீழக்கோட்டை 110/22 KV துணை மின் நிலையம்: காந்தி கிராமம், சின்னாளபட்டி, சிறுமலை, சாமியார்பட்டி, அம்பாத்துரை, பச்சைமலையான்கோட்டை. ரெங்கநாதபுரம் 110/22-11 KV துணை மின் நிலையம்: கோலார்பட்டி, தேவிநாயக்கன்பட்டி, கல்வார்பட்டி, ரெங்கநாதபுரம், காசிபாளையம்.

Advertisement

மின்தடை

தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

விழுப்புரம் மாவட்டம்: (காலை 9:00 - மாலை 4:00) சொர்ணாவூர் துணை மின் நிலையம்: ஆர்.ஆர்.பாளையம், கொங்கம்பட்டு, மேட்டுப்பாளையம், பரசுரெட்டிபாளையம், குச்சிப்பாளையம், சொரப்பூர். சொர்ணாவூர் கீழ்பாதி, பூவரசன்குப்பம், பட்டரைப்பாதி, ஏ.ஆர்.பாளையம், கலிங்கிகுப்பம், வீரணம், கிருஷ்ணாபுரம், பாக்கம் மற்றும் டி. குப்பம் ஆகிய கிராமப்புறப் பகுதிகள்.

Advertisement