TNEA2026 விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு: ஜூன் 5-ஆம் தேதி வரை விண்ணபிக்கலாம்!
செய்தி முன்னோட்டம்
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் (BE/BTech) சேர விரும்புவோருக்கான தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை (TNEA 2026) விண்ணப்பப் பதிவு நடைமுறையில் மிக முக்கியமான மாற்றத்தை மாணவர் சேர்க்கை மையம் அறிவித்துள்ளது. ஜூன் 2-ஆம் தேதியுடன் முடிவடைய இருந்த விண்ணப்பக் கால அவகாசம், தற்போது மேலும் 3 நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டு ஜூன் 5-ஆம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த மே 8-ஆம் தேதி 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், அதற்கு முன்னதாகவே மே 3-ஆம் தேதி முதல் பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு தொடங்கியது. மே 31-ஆம் தேதி மாலை 6 மணி நிலவரப்படி, இதுவரை மொத்தம் 2,81,502 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
முக்கிய தேதிகள்
விண்ணப்பிக்கும் முறை
மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்ப நடைமுறையானது பதிவு செய்தல், கட்டணம் செலுத்துதல், விருப்பமான கல்லூரிகளைத் தேர்வு செய்தல் (Choice Filling), ஒதுக்கீடு மற்றும் உறுதிப்படுத்துதல் ஆகிய நிலைகளைக் கொண்டது. முக்கிய நாட்காட்டி: விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 2026 ஜூன் 5 சமவாய்ப்பு எண் (Random Number) ஒதுக்கீடு: 2026 ஜூன் 5 இணையதள சான்றிதழ் சரிபார்ப்பு: 20.06.2026 முதல் தரவரிசைப் பட்டியல் (Rank List) வெளியீடு: 29.06.2026 குறைகளை நிவர்த்தி செய்தல்: 30.06.2026 முதல் 04.07.2026 வரை
இணையதளம் வாயிலாக நடைபெறும்
கலந்தாய்வு எப்போது?
அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கான 7.5% சிறப்பு இடஒதுக்கீடு பிரிவினருக்கான கலந்தாய்வு, பொதுக் கலந்தாய்வு (General Counselling), துணைக் கலந்தாய்வு மற்றும் எஸ்சிஏ (SCA) காலியிடங்களுக்கான எஸ்சி (SC) வகுப்புக் கலந்தாய்வு உள்ளிட்ட அனைத்துக் கலந்தாய்வு தேதிகளும், அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (AICTE) அதிகாரப்பூர்வ அறிவிப்பைத் தொடர்ந்து பின்னர் விரிவாகத் தெரிவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலந்தாய்வு நடைமுறைகள் அனைத்தும் முழுக்க முழுக்க இணையதள வாயிலாகவே (Online) நடத்தப்பட உள்ளன.