தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படுவது குறித்து உறுதி செய்தார் அமைச்சர் அன்பில் மகேஷ்
தமிழ்நாடு முழுவதும் கோடை வெப்பம் மிக அதிகமாக கொளுத்துகிறது. பல மாவட்டங்களில் வெப்ப அலையானது வீசிவருகிறது என்பதால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஏற்படலாம் என்னும் எதிர்பார்ப்பு எழுந்தது. மேலும் வெயிலின் தாக்கமானது தமிழகத்தில் குறையாத பட்சத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முதல்வருடன் ஆலோசனை நடத்தி முடிவெடுக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அண்மையில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது அமைச்சர் அன்பில் மகேஷ், திட்டமிட்டபடி பள்ளிகள் அனைத்தும் கோடைவிடுமுறை முடிந்து திறக்கப்படும் என்று உறுதி செய்துள்ளார். அதன்படி பள்ளிக்கல்வித்துறை முன்னதாக அறிவித்தவாறு, 6லிருந்து 12ம்வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு ஜூன் 1ம் தேதியும், 1 முதல் 5 வரை பயிலும் மாணவர்களுக்கு ஜூன் 5ம்தேதியும் பள்ளிகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.